திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (08:32 IST)

ரிங்கு சிங் நிச்சயம் சிறந்த தேர்வாக இருந்திருப்பார்… ஆகாஷ் சோப்ரா கருத்து!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது டி 20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தன்னுடைய சேனலில் பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் “இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட் செய்வார்கள். திலக் வர்மாவை கண்டிப்பாக முன்னாடி இறக்கி ஆட வைக்க மாட்டார்கள். அவர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிறகு ஆட வருவார் என்றால் அவரை விட ரிங்கு சிங் நல்ல தேர்வாக இருக்கும்.

ஆறாவது இடத்துக்கு திலக் வர்மா சரிவருவாரா என்பதுதான் கேள்வி.  அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். ஆனால் பின் வரிசையில் ஆட ரிங்கு சிங்  சிறந்த தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.