செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (08:31 IST)

இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐஐடி முதலிடம்..!

Chennai IIT
இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இந்த பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்
 
இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 86.69 புள்ளிகள் பெற்று ஐ.ஐ.டி  முதல் இடத்தில் உள்ளது.
 
இரண்டாம் இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி உள்ளது. 
 
72.14 புள்ளிகளுடன் டெல்லி எய்மஸ் நிறுவனம் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 
 
62.74 புள்ளிகளுடன் 15ஆம் இடத்தில், கோவை அமிர்தா விஷ்வ வித்தியாபீடம் இடம் பெற்றுள்ளது. 
 
17ஆம் இடத்தில் வேலூர் வி.ஐ.டி மற்றும் 18ஆம் இடத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகம் இடம் பெற்றுள்ளன.
 
21ஆம் இடத்தில் திருச்சி என்.ஐ.டி, 27ஆம் இடத்தில் சென்னை சவீதா மருத்துவ கல்லூரி, 32ஆம் இடத்தில் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் , 36ஆம் இடத்தில் கோவை பாரதியார் பல்கலைகழகம் இடம் பெற்றுள்ளன. 
 
புதுச்சேரி ஜிப்மர் 39ஆம் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைகழகம் 48ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
 
Edited by Siva