ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?
ப்ளே ஆஃப்க்கு செல்வதற்கான கடைசி அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஸ் வென்ற சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர் சி பி அணி விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் சேர்த்துள்ளது.
அந்த அணியில் கோலி(47), டு பிளசீஸ் (54), ரஜத் படிதார்(41), கேமரூன் க்ரீன் (38) என விளையாடி அணிக்கு வலுவான ஸ்கோரை சேர்த்தனர். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்தி(14) மற்றும் மேக்ஸ்வெல் (16) ரன்கள் சேர்க்க 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இந்த இலக்கை எட்டிப் பிடிக்காவிட்டாலும் 201 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தாலும் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிடும். 200 ரன்களுக்கு குறைவாக சேர்த்தால் ஆர் சி பி அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும்.