1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 மே 2024 (16:13 IST)

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

17 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இன்று நடக்கும் போட்டியில் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை சில நிபந்தனைகளோடு வெற்றி பெற்றால் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

முதலில் ஆர் சி பி பேட் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சி எஸ் கே நெட் ரன் ரேட்டை அந்த அணி தாண்டும். அதுபோல இரண்டாவது பேட் செய்தால் ஆர் சி பி 18.1 ஓவர்களுக்குள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்று லக்னோ அணி தங்கள் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றால் ஆர் சி பி அணி நான்காவது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் செல்லும். 

இந்நிலையில் போட்டி நடக்கும் பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. ஆனால் இன்று காலை முதல் வெயில் அடித்தது. இதனால் ரசிகர்கள் போட்டி மழையால் பாதிக்கப்படாது என குஷியாகினர். ஆனால் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுபற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “கோடை மழை பெய்யும்போது காலை நேரங்களில் வெயில் அடித்தால்  மாலையில் மழை பெய்யும். காலையில் மேக மூட்டமாக இருந்தால்தான் மாலை மழை பெய்யாது. ஆனாலும் இன்று மாலை மழை பெய்யுமா அல்லது இரவில் மழை பெய்யுமா என்பதை பொறுத்துதான் போட்டி நடைபெறுவது முடிவாகும்” எனக் கூறியுள்ளார்.