1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (15:45 IST)

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

Hardiyak Paindiya
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது லீக் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.
 
கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர், 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 
 
இந்த நிலையில் மூன்றாவது முறையாக  மெதுவாக பந்து வீசியதாக ஹர்திக் பாண்டியா மீது புகார் எழுந்தது. இதன் காரணமாக அவருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. 

 
அதன்படி வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனின் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.