தொடர்புடைய செய்திகள்
- டாஸ் வென்றது மும்பை.. இன்னொரு வெற்றி யாருக்கு? பெங்களூரு அணியுடன் மோதல்..!
- சட்டையில் பட்டன் இல்லை.. தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள்.. அதிர்ச்சி தகவல்..!
- ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
- பண மோசடி வழக்கு: ஹர்திக், க்ருணால் சகோதரர் வைபவ் கைது.. மும்பை போலீஸ் அதிரடி..!
- இன்னைக்கு மேட்ச் ஜெயிச்சிடணும் ஆண்டவா..! பிள்ளையாரிடம் வேண்டுதல் வைத்த மும்பை இந்தியன்ஸ்!
ஐந்தாவது தோல்வி… ஸ்கூல் பசங்க ரேஞ்சுக்கு போட்ட ஆர்சிபி பவுலர்கள்- மும்பை அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்கள் ஆக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதையடுத்து பேட் செய்த ஆர் சி பி அணியில் பாஃப் டு பிளசீஸ், ரஜத்படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் அந்த அணி 196 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆர் சி பி பவுலர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் அடி வெளுத்து வாங்கியது. அந்த அணியின் இஷான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டத்தை மிகவும் எளிதாக்கினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் தோற்று புள்ளி பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது ஆர் சி பி.