திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (19:23 IST)

டாஸ் வென்றது மும்பை.. இன்னொரு வெற்றி யாருக்கு? பெங்களூரு அணியுடன் மோதல்..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்கள் ஆக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்தப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள நிலையில் பெங்களூர் அணியும் 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. எனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று விளையாடும் மும்பை மற்றும் பெங்களூர் அணியின் முழு விவரங்களை பார்ப்போம்.
 
பெங்களூரு அணி: டூபிளஸ்சிஸ், விராத் கோஹ்லி, ரஜத் படிதார், மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், தினேஷ் கார்த்திக், மனிப்பால் லோம்ரோர், ரீஸ் டாப்ளே, விஜயகுமார் வைஷக், சிராஜ், ஆகாஷ் தீப்
 
மும்பை அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், முகமது நபி, ரோம்ரியோ ஷெப்பர்ட், ஸ்ரேயாஸ் கோபால், பும்ரா, கோட்சி மற்றும் ஆகாஷ் மத்வால்.
 
Edited by Siva