திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (12:24 IST)

பண மோசடி வழக்கு: ஹர்திக், க்ருணால் சகோதரர் வைபவ் கைது.. மும்பை போலீஸ் அதிரடி..!

பிரபல கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா சகோதரர் வைபவ் என்பவர் மும்பை போலீசாரால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஹர்திக் பாண்ட்யாவுக்கு க்ருணால் பாண்ட்யா மற்றும்  வைபவ் பாண்ட்யா இரண்டு சகோதரர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் க்ருணால் பாண்ட்யாவும் கிரிக்கெட் வீரர் என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் பணமோசடி வழக்கில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சற்று முன் வைபவ் பாண்ட்யாவை கைது செய்துள்ளனர், ஹர்திக், க்ருணால், வைபவ் ஆகிய மூன்று பேரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் மற்ற இருவருக்கு தெரியாமல் ரூபாய் ஒரு கோடி வரை தன்னுடைய வங்கி கணக்கில் வைபவ் பாண்ட்யா மாற்றியதாக தெரிகிறது 
 
தன்னுடைய லாப விகிதத்தை அதிகரித்து மோசடியில் ஈடுபட்ட வைபவ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சொந்த சகோதரர்களையே வைபவ் பாண்ட்யா ஏமாற்றி உள்ள நிலையில் அவரது கைது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran