திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:32 IST)

இன்னைக்கு மேட்ச் ஜெயிச்சிடணும் ஆண்டவா..! பிள்ளையாரிடம் வேண்டுதல் வைத்த மும்பை இந்தியன்ஸ்!

Hardik Pandya
இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியோடு மோத உள்ள நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வீரர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.



நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் முதல்முறையாக ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கிய நிலையில் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்வியையே சந்தித்து வந்தது. இதனால் கடுப்பான மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவை கரித்துக் கொட்ட தொடங்கி விட்டார்கள்.

முன்னதாக நடந்த நான்காவது போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ். இன்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளது மும்பை இந்தியன்ஸ். இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


இந்நிலையில் இன்று போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன், இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா, குருணால் பாண்ட்யா ஆகியோரும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிக்கு விநாயகர் அருள் புரிவாரா என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K