ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய லோகோ இது தான்..

Arun Prasath| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (16:46 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது அணியின் லோகோவையும் பெயரையும் புதிதாக மாற்றியுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் திடீரென ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டிவிட்டர், ஃபேஸ்புக், ஆகிய சமூக வலைத்தளங்களின் கணக்குகளில் இருந்த புரொஃபைல் புகைப்படம் நீக்கப்பட்டன.

எதனால் இவ்வாறு செய்கிறார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதனை தொடர்ந்து அணியின் பெயரையும் லோகோவையும் மாற்றப்போவதாக தகவல் வந்தது.


இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளக் கணக்குகளில் புதிய புரொஃபைல் பிக்சரை ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிர்வாகம் மாற்றியுள்ளது. அதே போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றியுள்ளது.

இது குறித்து பெங்களூர் அணியின் தலைவர் சஞ்சீவ் சுரிவாலா “நாங்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புபவர்கள், ஆர்சிபிக்கு அது தேவையும் கூட. இந்தாண்டு நாங்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடுவோம்” என கூறியுள்ளார். இதில் மேலும் படிக்கவும் :