புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (09:50 IST)

17 ஓவர்களில் முடிந்த 100 ஓவர் போட்டி – அமெரிக்கா மிக மோசமான சாதனை!

அமெரிக்க அணி தான் பங்கேற்ற போட்டியில் 12 ஓவர்களை மட்டுமே சந்தித்து 35 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆகியுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பைத் தொடர் லீக் 2 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேபாளம் மற்றும் யு.எஸ்.ஏ அணிகள் மோதின. இரு அணிகளுமே சர்வதேசக் கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகள் என்றாலும் நேபாளத்தின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி வீரர்கள் 35 ரன்களுக்கு சுருண்டது. அமெரிக்க அணியின் சேவியர் மார்செல் 15 ரன்கள் இரட்டை இலக்கைத் தொட்டார். நேபாளத்தைச் சேர்ந்த பவுலர் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அமெரிக்காவின் இன்னிங்ஸ் முழுவதுமே மொத்தமாக 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொள்ளப் பட்டது.

இதையடுத்து களமிறங்கிய நேபாள அணி 5.2 ஓவர்களில் 36 ரன்களை 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து சேர்த்து எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் குறைவான ரன்களை அடித்த அணி என்ற மோசமான சாதனையை அமெரிக்கா பெற்றுள்ளது.