வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (21:28 IST)

இறுதிப் போட்டியில் மீண்டும் கோட்டை விட்ட இந்திய அணி

இறுதிப் போட்டியில் மீண்டும் கோட்டை விட்ட இந்திய அணி
சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசம் இடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது
 
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை கோட்டை விட்ட இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது