திங்கள், 31 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 மார்ச் 2025 (08:48 IST)

17 ஆண்டுகால சோக வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்த RCB.. சென்னையை வீழ்த்தி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருத்துராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி பேட் செய்ய வந்த ஆர் சி பி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 196 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் பில் சால்ட், கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் கணிசமான ரன்களை அடிக்க, ரஜத் படிதார் அரைசதம் அடித்துக் கலக்கினார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய சி எஸ் கே அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்தது. அதனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த தேவைப்படும் ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே சென்றது. ஆனாலும் விக்கெட்கள் விழந்தவண்ணம் இருந்ததால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது, அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்களும், தோனி 30 ரன்களும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 17 ஆண்டுகள் கழித்து சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி.