செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 8 ஏப்ரல் 2023 (08:23 IST)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயம்!

ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் தொடங்கி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதில் விளையாடும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் பலமான அணியாக உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர் ஆன இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 700 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.