1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hyderabad team Sotappal easy target for Lucknow team

ஐபிஎல்-2023: ஹைதராபாத் அணி திணறல் ….லக்னோ அணிக்கு எளிய இலக்கு!

hydrabath -Lucknow
ஐபிஎல் -2023- 16 வது சீசன் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இடம்பெற்றுள்ள 10 அணிகளும் தங்களின் திறமையைக் காட்டி விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில்,  சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  சன் ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

எனவே  இந்தப் போட்டியில் இரு அணிகளில் யார் ஜெயிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஹைதராபாத் அணியில், பிரீத் சிங் மற்றும் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இதில், பிரீத் சிங் 31 ரன்னும், திரிபாதி 34 ரன்னும், சுந்தர் 16 ரன்னும், அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்து, லக்னோவுக்கு 122 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியில் பாண்ட்யா 3 விக்கெட்டும், மிஸ்ரா 2  விக்கெட்டும் கைப்பற்றினர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயம்!