190+ ரன் சேஸிங்கில் அஸ்வினை ஓப்பனராக இறக்கிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 198 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வழக்கமாக ஓப்பனராக இறங்கும் பட்லர் இறங்காமல், அஸ்வின் இறங்கினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆனாலும் அஸ்வின் ரன் எதுவும் சேர்க்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த போட்டியில் கடைசி வரை போராடிய, ராஜஸ்தான் அணி, 192 ரன்கள் சேர்த்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.