திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (00:20 IST)

ஐபிஎல்-2023: ஜூரெல் அதிரடி வீண்! பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி....

punjab - Rajasthan
ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடரில்  இன்றைய  போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி  பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்  தேர்வு செய்தது.
எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  ஆட்டம் தொடங்கிய நிலையில்,  பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  பரமிஸ்ரன் சிங் 60( 34பந்துகள்) ரன்கள், ஷிகர் தவான் 86 (56 பந்துகள்) ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாயினர்.

அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஆயினும், ஜிட்டேஷ் சர்மா 27 ரன்கள் சேர்த்தார். எனவே 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி,4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில், ஹோல்டர் 2 விக்கெட்டும்,சாஹல் மற்றும் அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து,  வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்த  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 42 ரன்களும், ஹெட்மெயர் 18 பந்துகளில் 36 ரன்களும், ஜுரல் 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடினர்.

இந்த நிலையில்,  ராஜஸ்தான் அணியினர் கடைசி ஓவரில் 16 ரனகள் தேவை என்றிருந்த   நிலையில், பஞ்சாப் பந்து வீச்சாளர் சாம் கரன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.

எனவே பஞ்சாப் அணி இன்றைய8 வது லீக்  போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில், எல்லிஸ் 4 விக்கெட்டும், சிங் 2 விக்கெட்டும், கைப்பற்றினர்.