செவ்வாய், 2 ஜூலை 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (14:19 IST)

ராகுல் ட்ராவிட் சேவை.. இந்திய அணிக்கு தேவை! – ஒப்பந்தத்தை நீட்டித்தது பிசிசிஐ!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட்டின் பதவி காலத்தை மேலும் நீட்டித்து பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து முடிந்த உலக கோப்பை ஒருநாள் போட்டிகளோடு முடிவடைந்தது. அதை தொடர்ந்து ராகுல் ட்ராவிட்டின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லெக்‌ஷமன் அறிவிக்கப்படலாம் எனவும் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராகுல் ட்ராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மேலும் சில ஆண்டுகள் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ராகுல் ட்ராவிட் “கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியுடனான எனது பணி மறக்க இயலாததாக அமைந்துள்ளது. நாங்கள் இணைந்தே பல உயரங்களையும், சரிவுகளையும் கண்டுள்ளோம். அனைத்திலும் அவர்கள் அளித்த பங்களிப்பு, ஒற்றுமை சிறப்பானது. எனது பார்வை, திட்டம் ஆகியவற்றிற்கு மதிப்பளித்து செயல்படுத்த வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K