வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (12:17 IST)

இந்தியா தோல்வி: பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் ராகுல் ட்ராவிட்? – அடுத்து களமிறங்கும் 90ஸ் கிட்ஸ் நாயகன்!

உலக கோப்பையில் இந்தியா தோல்வியடைந்ததை தொடர்ந்து அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.



இந்திய கிரிக்கெட்டில் 90களில் கலக்கி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ராகுல் ட்ராவிட். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பின்னர் இந்தியாவின் யு19 அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் ட்ராவிட் பின்னர் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. அவரது தலைமை அணி பயிற்சியாளர் பதவிக்காலமும் மிக விரைவில் முடிவடைய உள்ளது. அவர் விரும்பினால் அதை மேலும் நீட்டிக்கலாம் என்றாலும் ராகுல் ட்ராவிட் அதை செய்யவில்லை. இதனால் அவரே அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக எண்ணுவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

அவருக்கு பதில் அடுத்த அணி தலைமை பயிற்சியாளராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் மற்றுமொரு ஃபேவரைட் கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மன் அணி பயிற்சியாளராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Edit by Prasanth.K