வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (15:35 IST)

டி 20 போட்டியில் இரட்டை சதம் அடித்துக் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

அமெரிக்காவில் நடக்கும் டி 20 கிரிக்கெட் லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த ரஹீம் கார்ன்வெல்.

அமெரிக்காவில் அட்லாண்டா ஒபன் என்ற டி 20 லீக் தொடர் நடந்து வருகிறது. இது ஐசிசியால் அங்கிகரிக்கப்பட்ட தொடர் இல்லை. இந்த தொடரில் அட்லாண்டா ஃபயர் அணிக்காக விளையாடிய ரஹீம் கார்ன்வெல் 77 பந்துகளில் 205 ரன்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். இந்த அதிரடி இன்னிங்ஸில் 22 சிக்ஸர்களும் 17 பவுண்டரிகளும் அடக்கம்.

டி 20 போட்டிகளில் இதுவரை எந்தவொரு வீரரும் இரட்டை சதம் அடித்ததில்லை. ஆனாலும் இந்த சாதனை ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப் படாது என்பதுதான் சோகம்.