1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:33 IST)

ஜடேஜா இல்லாத குறையை இவர்தான் நிரப்பப் போகிறார்… இலங்கை வீரர் கருத்து!

டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் ஜடேஜா இல்லாமல் போனது மிகப்பெரிய இழப்பு என இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனா கூறியுள்ளார்.

டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம்பெறாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இலங்கைக் கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் பூம்ரா இணைந்திருப்பது மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார். அதில் “ஆஸ்திரேலியாவில் பூம்ரா விளையாடுவது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் பூம்ரா விளையாடவில்லை. அதனால் இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக இருந்தது.