100 டெஸ்ட் விளையாடுவதே என் விருப்பம்… ரஹானேவின் ஆசை நிறைவேறுமா?
சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மண்ணைக் கவ்வியது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடியது அஜிங்க்யா ரஹானேதான். ஆனாலும் 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவர் அதற்கடுத்த தொடர்களில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தற்போது தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ரஹானே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தன் நோக்கம் எனக் கூறியுள்ளார்.
தற்போது 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே இன்னும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் தற்போதுள்ள அணி நிலவரத்தைப் பார்க்கும் போது ரஹானேவுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.