இங்கிலாந்து, அயர்லாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து ரஹானே நீக்கம்

r
Last Modified வியாழன், 10 மே 2018 (13:34 IST)
இங்கிலாந்து, அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் வீரர் ரஹானே நீக்கப்பட்டுள்ளார்.

 
 
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்படவில்லை.
 
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறுகையில், அயர்லாந்து, இங்கிலாந்து தொடரிலிருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது ஒரு கடுமையான முடிவாகும். நானாக இருந்திருந்தால் அம்பதி ராயுடுவுக்கு முன்னதாகவே ரஹானேவை தேர்வு செய்து இருப்பேன். இங்கிலாந்தில் பேட்டிங் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட கூடியவர் ரஹானே என்றார்.
g
சமீபத்தில் ரஹானே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரஹானேவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :