கருமை நிறத்தில் புதிய கோள்....
இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு மேலே பல கிரங்கள் சுற்றி வருகின்றன. அதில் பல கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், இந்த புதிய கிரகத்தை அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கிரகம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது.
இந்த கிரக்கத்திற்கு வாஸ்ப்-104 பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும், இந்த கிரகம் அடர்ந்த கருப்பு நிறத்தில் உள்ளதாம். அதாவது நிலக்கரியை விட கருப்பாக இருக்கிறதாம்.
பொதுவாக கிரகங்கள் நட்சத்திரங்களின் ஒளியை உமிழும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக அந்த கிரகங்கள் வெளிச்சம் கொண்டதாக இருக்கும்.
ஆனால், இந்த கிரகம் உமிழும் தன்மையை மிகவும் குறைவாக கொண்டுள்ளதால், நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஒளியில் 99% உள்வாங்கிக்கொண்டு ஒரு சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
இதனால் இந்த கிரகம் இவ்வளவு கருப்பாக உள்ளதாம். இந்த கிரகம் தனது வட்ட பாதையில் சுற்றுவதற்கு 1.76 நாட்கள் எடுத்துக்கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.