திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:06 IST)

வலி நிவாரணியால் இப்படி ஒரு விபரீதமா?

இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கார்ட் என்பவர் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால், பெண்கள் மீதனான ஈர்ப்பு ஆண்கள் மீது வந்துள்ளதாம். 
 
இங்கிலாந்தை சேர்ந்த 23 வயது ஸ்கார்ட் பர்டி சமீபத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டார். இதனால், தற்போது இவர் ஓரினச்சேர்க்கையாலராக மாறியுள்ளார். 
 
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் பாதம் பாதிக்கப்பட்டதால், அந்த வலியை குறைக்க, மருத்துவர்கள் வலி நிவாரணி மாத்திரையைப் பரிந்துரைத்தனர். வலி தொடர்ச்சியாக இருந்ததால் வலி நிவாரணியை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில், இவருக்கு இவரது காதலியின் மீது காதல் குறைந்துகொண்டே வந்துள்ளது. காதலிக்கு மன வருத்தம் ஏற்பட்டு, அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். 
 
ஆனால், காதலி மீதுதான் ஆர்வம் குறைந்ததே தவிர, பிற ஆண்களைப் பார்க்கும்போது இவருக்கு காதல் ஊற்றெடுத்தது. காதலி, உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால், காதல் பிரிவு குறித்து இவருக்கு வருத்தமோ வலியோ இல்லை.
 
எனவே, வலி நிவாரண மாத்திரைக்கும் தன்னுடைய விருப்ப மாற்றத்துக்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்துள்ளார்.  இறுதியில் ஓரினசேர்க்கையாளராக மாறியதற்கு காரணம் இந்த மாத்திரைதான் என்ற முடிவுக்கு வந்துள்ளார். 
 
ஆனால், அந்த குறிப்பிட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.