திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (13:38 IST)

தலைமை நீதிபதி தகுதி நீக்க மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்க மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
 
தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 7 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு துணைத்தலைவர் வெங்கயா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் சட்ட வள்ளுனர்களின் ஆலோசனைப்படி வெங்கயா நாயுடு, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்கட்சிகள் அளித்த மனுவை நிராகரித்தார்.
இதனையடுத்து காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய முடியாது எனக் கூறி இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.