செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (10:29 IST)

ரஞ்சி கோப்பையில் சதமடித்து அசத்திய ரஹானே! மீண்டும் இடம் கிடைக்குமா?

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே மோசமான பார்மால் அவரின் இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானே இப்போது தனக்கான இடத்தைத் தக்க வைக்கவே போராடிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் அவர் விளையாடியதுதான் அவரின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என பலரும் ஆருடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது உள்ளூர் போட்டித் தொடரான ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். இந்த போட்டியில் அவர் 290 பந்துகளில் 17 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 129 ரன்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் அணியில் அவர் மீண்டும் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் உயிர்ப்போடு உள்ளன.