''தொடர்ந்து சொதப்பல்...''விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் கேப்டன் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு ஆதரவாக இலங்கை வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. உலகிலுள்ள சிறந்த பேட்ஸ்மேன் களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இவர் சச்சின் சாதனைகளை முறியடிப்பார் என கூறப்பட்ட நிலையில்,சமீக காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இவருக்கு பார்ம் இல்லை என்பதால் ஓய்வெடுக்கலாம் என முன்னாள் கபில்தேவ் விமர்சித்தார்.
தற்போது, 33 வயதாகும் விரட் கோலி, கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பின் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதனால், சமீபத்திய போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-2- உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற அடுத்து நடக்கவுள்ள ஆசிய கோப்பையில் கோலி சிறப்பாக விளையாட வேண்டும்.
இந்த நிலையில், இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே, கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார்