செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:36 IST)

ஓய்வை அறிவித்த நியுசிலாந்தின் ராஸ் டெய்லர்!

நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் வங்க தேசத்துடனான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணியின் மூத்த வீரரான ராஸ் டெய்லர் இப்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். 37 வயதாகும் டெய்லர் நியுசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள், 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். நியுசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரராக ராஸ் டெய்லர் இருக்கிறார்.

விரைவில் நடக்க இருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகள், மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளோடு அவர் ஓய்வுப் பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.