1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2024 (10:59 IST)

நியூசிலாந்து வெற்றிக்கு CSK அணிக்குதான் நன்றி சொல்லவேண்டும்- ரச்சின் ரவீந்தரா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா அபார சதம் உதவியது.

முதல் இன்னிங்ஸில் அவர் 157 பந்துகளில் 134 ரன்கள் சேர்த்து சிறப்பாக ஆடினார். அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம்.  அதே போல இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இதனால் அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த இன்னிங்ஸ் பற்றி பேசிய ரச்சின் ரவீந்தரா “என்னுடைய இந்த இன்னிங்ஸுக்கு சி எஸ் கே அணிதான் முக்கியக் காரணம். சிஎஸ்கே அணிக்காக விளையாடியது எனக்கு மிகவும் உதவியது. இந்தியாவின் வெவ்வேறு விதமான பிட்ச்களில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.