நியூசிலாந்து அணிக்கு எளிய இலக்கு.. 5 ரன்களில் ஒரு விக்கெட்.. யாருக்கு வெற்றி?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில், நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி எளிய இலக்கு கொடுத்துள்ள நிலையில், 5 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்துள்ளதால், போட்டி விறுவிறுப்பாக உள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து 462 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்கள் எடுத்தது, மற்றும் அந்த அணிக்கு வெற்றி பெற 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போது, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும் நிலையில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் எடுத்துள்ளது. நட்சத்திர ஆட்டக்காரர் டாம் லாதம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார், அவரது விக்கெட்டை பும்ரா எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் வெற்றி பெற 102 ரன்கள் மட்டுமே தேவை, இந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்து விக்கெட்டுக்களை சுருட்டி மாயாஜாலம் ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva