திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (12:50 IST)

IND vs NZ Test : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி! முதல் வெற்றியை கைப்பற்றிய நியூசிலாந்து!

India vs New Zealand test

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

 

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை அளித்தது.

 

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 402 ரன்களை குவித்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய இந்திய அணி 462 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 150 ரன்களும், ரிஷப் பண்ட் 99 ரன்களும் அடித்தனர்.

 

இந்நிலையில் இன்று 107 ரன்கள் இலக்கு என்ற சிறிய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் நிதானமாக விளையாடி 110 ரன்களை குவித்து முதல் வெற்றியை கைப்பற்றியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னணி வகிக்கிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தை இந்தியா தோற்கடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K