1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ahmedabad team gets name in IPL series

ஐபிஎல் தொடரில்.... அஹமதாபாத் அணிக்கு பெயர் கிடைத்தது..

அஹமதாபாத் அணி
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அஹமதாபாத் அணிக்கு பெயர் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களைக் கொண்ட 2 புதிய அணிகள்  புதிதாக உருவாக்கப்பட்டது.

மேலும் லக்னோ அணியை 7 ஆயிரத்து 90 கோடிக்கு ஆர்பிஎஸ்ஜி நிறுவனமும் அகமதாபாத் அணியை ரூபாய் 5200 கோடிக்கு சிவிஎஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில்   இவ்விரு அணிகளும் விளையாட உள்ளதால் ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று அஹமதாபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என்று பெயர் கிடைத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா நெகட்டிவ் வந்தும் இரண்டாவது போட்டியில் ஆடமுடியாத இரண்டு வீரர்கள்!