மோசமான ஆடுகள பராமரிப்பு… லக்னோ பிட்ச் பராமரிப்பாளர் வேலை நீக்கம்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 100 ரன்கள் என்ற இலக்கை இந்தியா கடைசி பந்து வரை கொண்டு சென்று வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடைசி நேரத்தில் 19.5 வது ஓவரில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இவ்வளவு மெதுவான மைதானத்தில் விளையாடுவது சவாலாதனாக இருந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் ஹர்திக் பாண்ட்யா பேசி இருந்தார். இந்நிலையில் மோசமான பராமரிப்புக் காரணமாக அந்த மைதானத்தின் பராமரிப்பாளர் சுரேஷ் குமாரை பணிநீக்கம் செய்துள்ளது உத்தரபிரதேசக் கிரிக்கெட் சங்கம்.