திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (22:31 IST)

மகனுக்கு 'இந்தியா' என்று பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்

pakistani parents
பாகிஸ்தான்  நாட்டைச் சேர்ந்த தம்பதி தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டுள்ளனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதன் போக்கை கடைபிடித்து வருகிறது.

எனவே, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையே உறவு சுமூகமாக இல்லாத நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் குழந்தைக்கு  இந்தியா எனப் பெயரிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒமர் இசா என்ற பாடகர், வங்கதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு இஃப்ராஜிம் என்று பெயரிட்டுள்ளனர்.
குழந்தை வளர்ந்த பின்னரும் பெற்றோரின் அறையிலேயே தங்குவதுடன், தம்பதியர் நடுவில் உறங்குவதால், பாகிஸ்தானைச் சேர்ந்த தனக்கும், வங்கதேசத்தைச் சேர்ந்த மனைவிக்கும் இடையே உள்ள மகனுக்கு 'இந்தியா' எனப் புதிய பெயர் சூட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது நகைச்சுவைக்காக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.