திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (23:36 IST)

இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு !

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

வங்கதேசத்திற்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டி  நேற்று முன் தினம் நடந்தது.

இப்போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  41.2 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார். கடைசி 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் இந்திய அணி குறைவான ஸ்கோரை பெற்றது.

இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும்  1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின்போது, இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தில் குறைவாக பந்து வீசினர். எனவே, ஐசிசி நடுவர் ரஞ்சன் மடுகல்லே ,  இப்போட்டியில் இருந்து பெறும் பணத்தில் இருந்து 80% அபராதம் விதித்துள்ளார்.