1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (16:11 IST)

கேப்டன்சி மிக மோசமாக இருந்தது…. ரோஹித் ஷர்மாவை விமர்சித்த முன்னாள் வீரர்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  41.2 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார். கடைசி 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் இந்திய அணி குறைவான ஸ்கோரை பெற்றது. 

இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி சீரான ரன்ரேட்டில் உயர்ந்து வந்தது . ஒரு கட்டத்தில் அந்த அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெற்றிக்கு  இன்னும் 50 ரன்களுக்கு மேல் தேவை என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடிய மெஹிந்தி ஹசன் மிராஸ் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினார்.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் அதை மோசமான கேப்டன்சி காரணமாக தவறவிட்டதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். மேலும் இந்த தவறுகளில் இருந்து இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.