திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (16:15 IST)

கேட்ச் விட்டதோட இதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி முதலில் ஆடி 186 ரன்கள் மட்டுமே சேர்தது. அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி சீரான ரன்ரேட்டில் உயர்ந்து வந்தது .

ஒரு கட்டத்தில் அந்த அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெற்றிக்கு  இன்னும் 50 ரன்களுக்கு மேல் தேவை என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடிய மெஹிந்தி ஹசன் மிராஸ் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினார்.

கடைசி விக்கெட்டுக்கு இந்திய அணி சார்பாக நிறைய பீல்டிங் கோளாறுகள் நடந்ததால் வெற்றி கைவிட்டுப் போனது. அப்படி பட்ட நிலையில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கேட்ச் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முக்கியமானக் கட்டத்தில் கேட்ச்களை விட்டபோது கேப்டன் ரோஹித் ஷர்மா , தன் பொறுமையை இழந்து கடுமையாக அவரைத் திட்டினார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசும்போது “ராகுல் கேட்ச்சை விடாமல் இருந்திருந்தால், முடிவு வேறு மாதிரி மாறியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நாம் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் என்பதுதான் முக்கியப் பிரச்சனை. இன்னும் கூடுதலாக 80 ரன்களாவது சேர்த்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.