ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸுடன் இன்று மோதல்

cricket
Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (10:27 IST)
இன்று நடக்கவிருக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுடன் மோத இருக்கிறது இந்தியா. இந்த தொடரில் வெற்றிபெற்றால்தான் இந்தியாவின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்.

முன்னதாக நடைபெற்ற டி20 போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இமாலய சாதனை படைத்தது இந்தியா. தற்போது நடந்து வரும் ஒருநாள் ஆட்டத்தின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால்தான் இந்தியாவுக்கு கோப்பை உறுதியாகும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் ட்ரா ஆக வாய்ப்பு உள்ளது. எனவே இது இந்திய வீரர்களுக்கு சவாலான ஆட்டமாக இருக்க போகிறது.

சென்ற ஆட்டத்தில் கோஹ்லியும், ஷ்ரெயாஸும் அற்புதமாக ஆடி சதம், அரைசதம் என வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இந்த ஆட்டத்திலும் அவர்களுடைய பார்ட்னர்ஷிப்பை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

துவக்க ஆட்டக்காரரும், சிறந்த பேட்ஸ்மேனுமான ஷிகார் தவான் காயம் ஏற்பட்டதிலிருந்து சுணக்கமான ஆட்டத்தையே கொடுத்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிகப்பட்சமாக 23 ரன்களே எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.இதில் மேலும் படிக்கவும் :