கிரிக்கெட் விளையாடதானே போனீங்க?? – ஷிகார் தவானின் சேட்டை வீடியோ

shikhar dhawan
Last Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:59 IST)
வெஸ்ட் இண்டீஸுடன் சுற்றுப்பயண ஆட்டத்திற்கு சென்ற இந்திய அணி ஷிகார் தவான் சுற்றுலா பகுதியில் சாகசம் செய்யும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான். தற்போது வெஸ்ட் இண்டீஸோடு நடைபெரும் சுற்றுப்பயண ஆட்டத்தில் இந்திய அணியில் ஷிகார் தவான் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய ஷிகார் தவான் 3 பந்துகளில் 2 ரன்களே எடுத்து அவுட் ஆனார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஸ்பெயினில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி வரும் ஷிகார் தவான் அருவிகளிலில் குதிப்பது, படகிலிருந்து தண்ணீருக்குள் பல்டி அடிப்பது என சேட்டைகள் பல செய்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். ஷிகார் தவானின் இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் அதை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :