1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (09:33 IST)

தமிழரின் புத்திசாலித்தனத்தால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளால் பாகிஸ்தான் தற்போது விடப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐநா நாடுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை பாகிஸ்தான் வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை அனைத்து நாடுகளும் நிராகரித்தன. பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, சீனா கூட இந்த விஷயத்தின் தங்களால் தலையிட முடியாது என்றும், இது இரு நாட்டு பிரச்சனை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு கொள்ளுங்கள் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டன
 
இதனை அடுத்து சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவின் நிலையை சீன தலைவர்களிடம் எடுத்து கூறினார். இந்த பயணம் காஷ்மீர் விவகாரத்திற்கு முன்பே திட்டமிட்டு இருந்தாலும் இந்த பயணத்தின் பேச்சுவார்த்தை பெரும்பாலும் காஷ்மீர் விவகாரம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா தலைவர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், யூனியன் பிரதேசமாக லடாக் மாற்றபட்டாலும் அதன் எல்லைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் என்பதால் இனி வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இரு நாடுகளின் உறவில் எந்தவித விரிசல் ஏற்படாமல் இருப்பது முக்கியம் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார் 
 
அமைச்சர் ஜெய்சங்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீனத் தலைவர்கள் காஷ்மீர் குறித்து இனி எந்த வித கருத்தும் தெரிவிக்க மாட்டார்கள் என்று உறுதி அளித்தனர். மேலும் சீன அதிபர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வரும் போது பிரதமர் மோடியிடமும் மற்ற தலைவர்களுடனும் இது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மொத்தத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது