இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு

Cricket
Abimukatheesh| Last Updated: புதன், 25 அக்டோபர் 2017 (17:36 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9  விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது.

 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடும் நெருக்கடியில் உள்ளார். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவரிலே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாதம் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தனர். எளிய இலக்கை கொண்டு இந்திய அணி அடுத்து களமிறங்க உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :