செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (11:36 IST)

2வது ஒருநாள்போட்டி; பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று புனேயில் நடைபெறுகிறது.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிடும். இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடும் நெருக்கடியில் உள்ளார். 
 
கடந்த போட்டியில் தொடக்க வீரர்கள் ரோகித் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கும் முன்பே அவுட் ஆகி வெளியேறியது அணியின் ரன் குவிப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்துவிட்டனர்.
 
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.