ரூ.40 லட்சம் மதிப்பில் தனக்குத்தானே தீபாவளி பரிசு பெற்றுக்கொண்ட மாதவன்
தல அஜித்தை போலவே நடிகர் மாதவனும் ஒரு மிகப்பெரிய பைக் வெறியர். எந்த புதிய மாடல் பைக் வந்தாலும் அதன்மீது ஒருகண் வைக்கும் மாதவன் கடந்த தீபாவளி அன்று இந்தியாவின் ரோட்மாஸ்டர் என்ற அதிநவீன, ஆடம்பரமான பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
ரூ.40.45 லட்சம் மதிப்புள்ள இந்த பைக் 1811சிசி திறன் கொண்டது. இந்த பைக்கில் சுமார் 64 லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம். மிகவும் கம்பீரமாக இருக்கும் இந்த பைக் மீது அமர்ந்து மாதவன் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் தயாராகி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக், இந்தியாவில் வெகுசிலரிடம் மட்டுமே உள்ளது. அவர்களில் ஒருவர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் தனக்குத்தானே அளித்து கொண்ட தீபாவளி பரிசு என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.