திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:54 IST)

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா?.. சாதனை படைக்க தவறிய மோடி மைதானம்!

கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகக் கோப்பையை வென்றது. தொடர்ந்து 10 போட்டிகளை வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 92,453 ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டு ரசித்துள்ளனர். இதனால் ஒரு கிரிக்கெட் போட்டியை அதிக ரசிகர்கள் கண்டுகளித்த போட்டி என்ற சாதனையைப் படைக்க தவறியுள்ளது இந்த போட்டி.

ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியை 93,013 ரசிகர்கள் நேரில் பார்த்ததுதான் இதுவரை அதிக ரசிகர்கள் கண்டுகளித்த போட்டியாக அமைந்துள்ளது. இந்த சாதனையை அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிக்கெட் விலை அதிகமாக இருந்த காரணத்தால் முழு மைதானமும் நிரம்பவில்லை என சொல்லப்படுகிறது.