மேக்ஸ்வெல் மனைவிக்கு மோசமான மெஸேஜ்கள்… இந்திய ரசிகர்கள் எல்லை மீறல்!
கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான வினி ராமனின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அவருக்கு இந்திய ரசிகர்களிடம் இருந்து அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகள் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரின் பதிவில் “இதையெல்லாம் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா என தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் பிறந்து வளர்ந்த உங்கள் கணவர் விளையாடும் ஒரு நாட்டு அணிக்கு ஆதரவு தந்து கொண்டே நீங்கள் ஒரு இந்தியராக இருக்கலாம். உங்கள் ஆவேசத்தை எல்லாம் முக்கியமான உலக நடப்புகளின் மேல் செலுத்துங்கள்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து வினி ராமனுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.