1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Pat Cummins talked about getting virat kohli wicket and crowd silent

கோலி விக்கெட்டை வீழ்த்திய போது மைதானத்தில் நிலவிய அமைதி… பேட் கம்மின்ஸ் நெகிழ்ச்சி!

India vs Australia Live
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கோலியின் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பில் அடிக்க விக்கெட் இழந்தார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் போன அந்த சமயம் மொத்த க்ரவுண்டுமே கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது.

இந்த தருணம் குறித்து பேசியுள்ள பேட் கம்மின்ஸ் “கோலியின் விக்கெட்டை எடுக்கும் போது மைதானத்தில் அமைதி நிலவியது. அந்த தருணம் நான் மைதானத்தில் அனுபவித்த இனிமையான தருணங்களில் ஒன்று. அப்போது நிலவிய அமைதி எனக்கு திருப்திகரமான ஒன்று.” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “நான் தங்கியிருந்த ஹோட்டல்களில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் நீல நிற டீஷர்ட் அணிந்து மைதானத்துக்கு சென்றனர். அப்போது நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அன்று மாலை நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கோலி மற்றும் ராகுல் மனைவி பற்றி ஹர்பஜன் சிங் அடித்த கமெண்ட்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!