ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:59 IST)

உலகக் கோப்பை கனவு அணியில் இடம்பெற்ற 6 இந்திய வீரர்கள்!

கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகக் கோப்பையை வென்றது. தொடர்ந்து 10 போட்டிகளை வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றத்தை அளித்தது.

இது இந்திய அணி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஐசிசி அறிவித்துள்ள கனவு அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும், நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளில் இருந்து தலா ஒரு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி கனவு அணி
குயிண்டன் டி காக், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, டேரில் மிட்செல், கே எல் ராகுல், கிளன் மேக்ஸ்வெல், ரவீந்தர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, தில்ஷன் மதுஷங்கா, ஆடம் ஸாம்பா, முகமது ஷமி