திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:30 IST)

ஆஸி அணிக்கு எதிரான டி 20 தொடர்… சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இளம் அணி!

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக முடிந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவோடு5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.

இந்த போட்டியில் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகியுள்ளதால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸி தொடருக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ( விக்கெட் கீப்பர்), வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார். (ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்)