ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (10:07 IST)

விலகிய சூர்யகுமார்.. உள்ளே வந்த ஆகாஷ் மத்வால்! – தாக்குபிடிக்குமா மும்பை?

Akash Madhwal
ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவிற்கு மாற்றாக ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில் மும்பை அணி முதன்முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

இதுவரை நடந்த 12 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில் இன்று சன் ரைசர்ஸ் அணியுடன் மோத உள்ளது மும்பை அணி. முந்தைய ஆட்டத்தில் காயம்பட்ட மும்பை வீரர் சூர்யாகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அணியின் பவுலிங் பலமானாலும், பேட்டிங்கில் சூர்யகுமார் இல்லாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் ஓரளவு டீசண்டான வெற்றியையாவது மும்பை அணி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.